தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மணிகண்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பீட்சா 2 வில்லா என்ற படத்தில் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக, இவர் விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டராக இருந்தார். இதற்காக இவருக்கு சில விருதுகளுமே கிடைத்திருந்தது. அதற்குப்பின் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண் போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.
மணிகண்டன் திரைப்பயணம்:
அதற்குப்பின் சூர்யா நடிப்பில் மற்றும் தயாரிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் அவர்கள் ராஜகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்று சொல்லலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த குடும்பஸ்தன் படம் நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
குடும்பஸ்தன் படம்:
இந்த படத்தை சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இந்த படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சான்வே மேக்னா. குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால், பெரும்பாலும் இவருக்கு குடும்ப கதைகள் தான் வந்து கொண்டிருக்கிறது.
சான்வே மேக்னா பதிவு:
இவருக்கு எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்று ஒரு பேட்டியிலேயே கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சான்வே மேக்னா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் உடனான புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எண்ணிக்கை இல்லா உரையாடல்கள், கணக்கில் அடங்கா இரவு நேர உரையாடல்கள், 24/7 காமெடி, சிரிப்பு, தெலுங்கு தமிழ் இங்கிலீஷ் கலந்து நிகழும் கற்றல்கள் என உங்களைப் போன்ற சிறந்த நடிகருடன் பணியாற்றுவது ரொம்ப அழகாக இருக்கிறது.
சான்வே மேக்னா குறித்த தகவல்:
உங்களிடம் ஒரு சிறந்த நடிகரை மட்டுமல்ல ஒரு அற்புதமான நண்பரையும் கண்டுபிடித்து இருக்கிறேன். அதனால் நான் நம்ப முடியாத அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சான்வே மேக்னா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் போது இருந்தே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பிட்டா கதலு என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகையானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.