வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் நேற்று (ஆகஸ்ட் 28) உயிரிழந்தார்.இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் வசந்தின் தந்தையும் வசந்த் அண்ட் கோ உரிமைமையாளருமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், வசந்த குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டது.

Advertisement

கடந்த 10- ஆம் தேதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் அவரது உடல் நிலை இன்று மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்ததால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சமீபத்தில் சிகிசை பலனின்றி உயிரிழந்து இறந்தார். இந்த நிலையில், அவரது சகோதரர் குமரி அந்தனன் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்சியடைந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரர் வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குமரி ஆனந்தனின் மகள் தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

Advertisement
Advertisement