அடித்தது மட்டுமல்லாமல், திருட்டு பட்டம் – தம்பி ராமையாவால் சினிமாவை விட்டே விலகிய கும்கி பட நடிகர்.

0
405
- Advertisement -

தன்னைவிட நன்றாக நடித்த நபரை தம்பி ராமையா அடித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் தம்பி ராமையா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக தான் பணி புரிந்திருந்தார். அதன்பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மலபார் போலீஸ் என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை கொண்டவர். மேலும், இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இவருடைய நடிப்பிற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இடையில் இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வடிவேலு நடிப்பில் வெளியாகியிருந்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார்.

- Advertisement -

தம்பி ராமையா குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தம்பி ராமையாவின் மோசமான செயல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று கும்கி. இந்த படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் இந்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

கும்கி படம்:

மேலும், இந்த படத்தில் ஜோசியர் கதாபாத்திரத்தில் சுப்பையா என்பவர் நடித்திருந்தார். இவர் வேற யாரும் இல்லை, தம்பி ராமையாவின் கார் ட்ரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சுப்பையா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கும்கி படத்தில் ஜோசியராக நடிக்க முதலில் பெண் ஜோசியரை தான் புக் பண்ணி இருந்தார்கள். ஆனால், பிரபு சாலமன் கடைசி நேரத்தில் ஆண் ஜோசியர் வேண்டும் என்று சொன்னவுடன் சொல்லியிருந்தார். எனக்கும் பல ஆண்டு காலமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை.

-விளம்பரம்-

சுப்பையா பேட்டி:

இதனால் தான் நான் கார் டிரைவராகவே தம்பி ராமையாவிடம் சேர்ந்தேன். அவரும் அந்த காட்சியில் என்னை நடிக்க வைத்தார். அந்த காட்சியில் நடித்தவுடன் எல்லோருமே கைத்தட்டி ரசித்தார்கள். எனக்கு கைதட்டல் கிடைத்ததை பார்த்து பிடிக்காமல் போன தம்பி ராமையா என்னை அடித்தார். இவருக்கு நான் ஆரம்பத்தில் இருந்தே நடிப்பது பிடிக்கவில்லை. அதுவும் நான் ஒரே டேக்கில் ஓகே செய்ததால் என்னை விட நல்லா நடிப்பியான்னு அதே இடத்தில் ஐந்து விரல் கன்னத்தில் பதியுமாறு அடித்தார். எனக்கு பாராட்டு கிடைத்தது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தம்பி ராமையா குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் அந்த காட்சியிலேயே அவர் என்னை அடிப்பது போன்ற சீன் வரும். அதில் அவர் உண்மையாகவே என்னை அடித்தார். பின் என்னை கீழே தள்ளிவிட்டார் இதனால் எனக்கு ரத்தமும் வந்தது. சூட்டிங் முடிந்து அவர் இனிமேல் நீ நடிப்பியா? என்று கன்னத்தில் அறைந்தார். அதை எப்போதுமே என்னால் மறக்க முடியாது. சினிமா ஆசை மட்டும் எனக்கு இல்லை என்றால் தம்பி ராமையாவை அன்னைக்கே நான் சங்கறுத்திருப்பேன். ஆனால் ,எனக்குள் இருந்த சினிமா ஆசையால் தான் அமைதியாக இருந்து விட்டேன். நான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தவறவிட்டேன். தம்பி ராமையா ரொம்ப மோசமான ஆளு. அவரை விட யாரும் உயர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பார் என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

Advertisement