ரஜினியோட இந்த படத்தில் ஏன்டா நடிச்சோம்ன்னு இருக்கு- உண்மையை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ

0
560
- Advertisement -

‘அண்ணாத்த’ படத்தில் ஏன் நடித்தோம்ன்னு தோணுது என குஷ்பு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினி. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பாண்டியராஜன், மீனா, லிவிங்ஸ்டன், குஷ்பூ, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்தது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பூ, அண்ணாத்த படத்தை இப்போது திரும்பிப் பார்த்தால் கூட அந்த படம் பண்ணனுமா? என்று தோணுது. நான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட காரணமே ரஜினி சார் தான். கதை சொல்லும் போது ரஜினி சாருக்கு ஜோடி கிடையாது என்றார்கள். அது தான் எங்களுக்கு சொன்ன சப்ஜெக்ட்.

- Advertisement -

குஷ்பூ பேட்டி:

திடீரென அவருக்கு ஒரு ஜோடி கொண்டு வந்தார்கள். எங்களுக்கு சொன்ன கதைப்படி அவருக்கு ஜோடி இல்லை என்பதால் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என நினைத்து தான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். நான் படத்தோட இரண்டாம் பகுதியில் அவர் தங்கையைத் தேடி போகும்போது நான் ஒரு பக்கமும், மீனா ஒரு பக்கமும் போகும் தேடுவோம். அப்படித்தான் எங்களிடம் கதை சொன்னார்கள். பின் ஒன் சைடு லவ் என்பதால் சின்ன ஆர்டிஸ்ட் போட்டால் போதும் என்றெல்லாம் சில ஆர்டிஸ்ட் பேர் சொன்னாங்க.

அண்ணாத்த படம் குறித்து சொன்னது:

டூயட் பாடல் எதுவும் இல்லை, ஒன் சைடு லவ், அந்த பொண்ணு ரஜினி சாரை ஃபாலோ பண்ணி வர மாதிரி ஒரு கேரக்டர் என்று சொன்னார்கள். இதனால் நானும், மீனாவும் கூட லொகேஷன்ல இதை பத்தி பேசிட்டு இருந்தோம். முதலில் அது டாக்டர் கதாபாத்திரமாக இருந்தது. அதனால் அது பொருத்தமா எந்த ஆர்டிஸ்ட் இருப்பாங்கன்னு டிஸ்கஸ் பண்ணோம். திடீரென்று பார்த்தால் ஒரு ஹீரோயினி வந்துட்டாங்க. டூயட் பாட்டு வந்தது. மொத்தமா படத்தோட டிராக் மாத்திட்டாங்க.

-விளம்பரம்-

ஹீரோயின் ரோல் குறித்து சொன்னது:

அதனால எங்களுடைய கேரக்டர் ஒண்ணுமே இல்லாம போச்சு. இடைவெளிக்குப் பிறகு எங்க கதாபாத்திரமே முடிஞ்சு போச்சு. ஏன் வறோம், எதுக்கு போறோம்னு ஒண்ணுமே தெரியாம போச்சு. சில நேரத்துல இது மாறி நடக்கத்தான் செய்யும். அதனால் என் மனதை தேற்றிக் கொண்டேன். ரஜினி சார், சிவா சார் கூட திரும்பவும் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருந்தார்.

குஷ்பூ திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement