தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் அரியலூரை சேர்ந்த மாணவி. இவர் அங்கு உள்ள மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் விடுதி வார்டன் அந்த மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதால் தான் மனமுடைந்து மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. மேலும், மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற வற்புறுத்தல் தான் காரணம் என்று ஒரு சாரரும், மற்றொரு சாரர் மதமாற்றம் கிடையாது, வேறு பிரச்சினை அதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பது, எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம்கள் எல்லோரும் அடங்கும். இதுநாள் வரையிலும் நாங்கள் மதம் வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறோம்.

Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த ஊர் மக்கள்:

மத சம்பந்தமாக நடக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வோம். எங்களூரில் இயங்கிக் கொண்டிருக்கிற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில் 60 சதவீதத்துக்கும் மேல் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் விடுதியிலும் இந்து மாணவிகளே அதிகம் தங்கி படித்து வருகின்றனர். இதுவரையில் இந்த பள்ளியில் மதமாற்றம் நடந்ததே கிடையாது. ஆனால், தற்போது மாணவி மரணத்தை வைத்து சில கட்சி, இயக்கத்தினர் ஆதாயம் தேடி வருகின்றனர். எங்கள் ஊருக்கு யாரோ சிலர் வந்து மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்தார் என்று எங்களை பொய் சொல்ல கூறுகின்றனர்.

மாணவியின் தற்கொலைக்கு போராடும் கட்சிகள்:

ஆனால், அவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழ்வதை சிலர் சீர்குலைக்க இந்த மாதிரி முயற்சி செய்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இருந்தாலும் பல அரசியல் கட்சிகளும் மாணவியின் தற்கொலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில் பலரும் ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர் கூறியது, எல்லோர் வீட்டிலும் பெண் குழந்தை உள்ளது. இழந்தவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும். திமுகவிற்கு இறந்தவர்களின் வழி தெரியாது.

Advertisement

மாணவி தற்கொலைக்கு போராடிய குஷ்பூ:

அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்வார்கள். மதமாற்றம் குறித்து இறந்த குழந்தை வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார். உடனே பயனர் ஒருவர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை என்று முதல்வர் கூறமுடியுமா? முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தான் சொல்லணும் என்று குஸ்பூவை விமர்சித்து இருந்தார். பின் குஷ்பூ, எவன்டா மதம் மாறினா? Marriage special act கேள்வி பட்டதே இல்லையா? இல்ல உன்ன மாதிரி கோமாளிக்கு யோசிக்கிற சக்தி இல்லையா? என்று வெளுத்து வாங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் குஷ்பூ தன் மகளைப் பார்க்க லண்டனுக்கு சென்றிருக்கிறார்.

Advertisement
\

விமர்சித்தவருக்கு குஷ்பூ போட்ட டீவ்ட்:

இதுகுறித்து பயனர் ஒருவர் குஷ்புவை விமர்சித்து, மாணவி தற்கொலை செய்து நியாயம் கேட்டு போராடும் நிலையில் இலண்டன் போவது அவசியமா? என்று பேசியிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பூ டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், மற்றவர்களின் வழியை காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த என் மகளுக்கு அம்மா தேவை. அதெல்லாம் இருக்கட்டும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் எங்கே? தேர்தல் தான் ரொம்ப முக்கியமா? என்று விமர்சித்துப் பேசி இருக்கிறார். இவரின் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement