திடீரென்று மருத்துவமனையில் அட்மிட்டான குஷ்பூ – கோக்ஸிக்ஸ் எலும்பு சிகிச்சையாம். அப்படி என்றால் என்ன தெரியுமா ?

0
604
kushboo
- Advertisement -

மருத்துவமனையில் திடீரென குஷ்பூ அட்மிட் ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்து இருந்தார்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். குஷ்பூவின் இயற்பெயர் நக்கர்த் கான்.

-விளம்பரம்-

இவர் செப்டம்பர் 29, 1970 இல் மும்பை மாகாணத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

குஷ்பூ திரைப்பயணம்:

தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.

குஷ்பூவின் மீரா சீரியல்:

இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருந்தது. இந்த தொடர் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

மருத்துவமனையில் குஷ்பூ:

இந்த நிலையில் குஷ்பு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதாவது, குஷ்பூ அவர்கள் திடீர் என்று மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு coccyx boneல் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் இரண்டு நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது குஷ்பூ நலமுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூ குணமடைந்து சீக்கிரம் வாருங்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கோக்ஸிக்ஸ் எலும்பு என்றால் என்ன :

பொதுவாக நமது பிட்டப் பகுதியில் வால் போன்ற எலும்பு காணப்படும். இதை வால் எலும்பு அல்லது கோக்ஸிக்ஸ் என்று அழைக்கின்றனர். இது நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் நமது இடுப்பிற்கு சப்போர்ட் ஆக இருக்கும். இந்த எலும்பு இந்த சிறிய வால் எலும்பில் வலி ஏற்பட்டால் தாங்கவே முடியாது. நீண்ட காலத்திற்கு இந்த வலி நீடித்தால் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அவதி ஏற்படும்.

Advertisement