தனது பழைய புகைப்படத்தை பதிவிட்ட குஷ்பூ. ஹன்சிகா முதல் கீர்த்தி சுரேஷ் செய்த கமண்ட்ஸ்.

By Rajkumar · 31/12/2019

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் 1990களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். அதோடு 80 கால கட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக திகழ்ந்தவர். நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை குஷ்பூ அவர்கள் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த்,சரத்க்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/B6qU7Axg0Vh/

நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முதலில் இவர் திமுக கட்சியில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு அவர்கள் சினிமா உலகில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். நடிகை குஷ்பு அவர்கள் டுவிட்டரில் தன்னுடைய பழைய புகைப்படம் மற்றும் கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். அதற்கு அதில் அவர் கூறியது, 'காற்று போல உங்களுடைய அனைத்து கனவுகளும் நனவாக வேண்டும். நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதை நம்புங்கள் உங்களால் உருவாக்க முடியும்.

இதையும் பாருங்க :பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை தெரியும். ஆனால், பிரபுவின் மகளை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

சாதிக்க முடியாது என்று இந்த உலகமே சொன்னாலும் அவர்கள் மத்தியில் நீங்கள் நினைப்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் 36 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதை பார்த்து தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ், டான்ஸர் மட்டும் டிவி அங்கர் கிகி, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி பிக் பாஸ் போட்டியாளர் சுஜா வருணி அனைவரும் வியந்து போய் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் நடிகை குஷ்பு அவர்கள் 36 வருடங்களுக்கு முன் இவ்வளவு அழகாக இருந்தாரா!! என்று இப்போதைய நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு உள்ளார். ரசிகர்கள் அவருடைய புகைப்படத்தை பார்த்து லைக்குகளைக் குவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு அவர்கள் தற்போது வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தற்போது கூட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குஷ்பு அவர்கள் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ள "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. அதுவும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் குஷ்பு நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு குஷ்பு அவர்கள் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளார்கள்.

behindtalkies AMP · Quick view
View full