குட்டி கதை வீடியோவை வடிவமைத்தவர் இவர் தானா. இயக்குனர் வெளியிட்ட தகவல்.
தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் வசூல் சாதனை படைத்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=gjnrtCKZqYg
இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வேற லெவல்ல தெறிக்க விட்டது. . இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று ஒரு குட்டி கதை என்ற டைட்டில் உடன் நேற்று வெளியாகி உள்ளது. பொதுவாக நம்ம விஜய் அவர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் பாருங்க : மொட்டை தலை, ஸ்டைலான தாடி, வித்யாசமான கண்ணாடி. ஆளே மாறியுள்ள பிரபுதேவா.
மேலும், இந்த குட்டி கதை பாடல் தான் `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பு ஷிமோகா சிறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனினில் இந்த படத்தில் விஜய் ஒரு ஜெயில் பாதுகாவலராக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வழக்கம் போல் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கனவே விஜய் செல்ஃபீ புள்ள பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த குட்டி கதை பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த குட்டி கதை பாடல் வீடியோவை வடிவமைத்தவர் லோகேஷ் கனகராஜ் இடம் துணை இயக்குனராக இருந்த லோகி என்பவர் தான்.
https://twitter.com/MrRathna/status/1228315928791666688
லோகி அவர்களுக்கு தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அதோடு குட்டி கதை பாடல் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. குட்டி கதை பாடல் வீடியோவை வடிவமைத்த லோகிக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் லோகிக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். தற்போது அவர்கள் பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.