மொட்டை தலை, ஸ்டைலான தாடி, வித்யாசமான கண்ணாடி. ஆளே மாறியுள்ள பிரபுதேவா.

0
23532
prabhudeva
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் பிரபு தேவாவும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா நடித்து வரும் பஹிரா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் பிரபு தேவா அவர்கள் பஹிரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கி வருகிறார். பரதன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காதலர் தினமான நேற்று வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த போஸ்டரில் நடிகர் பிரபுதேவா அவர்கள் மொட்டை அடித்து வித்தியாசமான கண்ணாடி அணிந்து புதுமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா.

-விளம்பரம்-

மேலும், இந்தப் படம் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் கூறியது, முதலில் நான் இந்தப் படத்தின் கதையை எனது நண்பர் ஒளிப்பதிவாளர் அபிநந்தனிடம் சொன்னேன். அவர் தான் இந்தக் கதை பிரபுதேவாவுக்கு செட் ஆகும் என்று சொன்னார். இதையடுத்து பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். பிரபுதேவா அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது. இந்தப் படத்தில் பிரபுதேவா அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நிச்சயமாக அவரை வேறு கோணத்தில் இந்த படம் காட்டும். பிரபுதேவா இதுவரை நடனம், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் கலக்கி பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் அவரை வேறுவிதமாக காட்டும். இந்த படம் சைக்கோ மிஸ்டரி திரில்லர் கதை.

படத்தில் நிறைய ஆச்சரியங்களும் ட்விஸ்டும் இருக்கும். மேலும், இந்தப் படத்தின் கதை ‘ஜங்கிள் புக்’ பட கேரக்டரின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்து விட்டது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை அமைரா தஸ்துர் நடித்திருக்கிறார். பஹிரா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாத கடைசியில் தொடங்குகிறது. இலங்கை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைகிறது. அதோடு நடிகர் பிரபுதேவா அவர்கள் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி என்ற திரைப் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தின் டிரெய்லர் வெளியானது. மேலும், டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

Advertisement