அஜித்தின் சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.! இப்படி ஒரு ஷோவா.!

0
929
Viswasam

அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம்,விவேகம் போன்ற படங்களுக்கு பின்னர் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கை கோர்த்துள்ளார் அஜித். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக அஜித் முதன் முறையாக களமிறங்கி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் புக்கிங் ஆரம்பித்து பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி வருகின்றது.

- Advertisement -

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக பெண்களுக்கு மட்டும் விஸ்வாசம் ஸ்பெஷல் ஷோ திரையிடுகிறார்கள் என்ற தகவல்கள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இப்போது, அந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெண்கள் சிறப்பு காட்சி ஹவுஸ் ஃபுல் ஆகியிருகின்றது. 

தமிழகத்தில் இதற்கு முன் வேறு எந்த நடிகர்களுக்கும் இப்படி செய்தது இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக, கேரளாவில் மட்டும் நடிகர் விஜய்க்கு இப்படி இரு “மகளீர் மட்டும்” காட்சி திரையிட்டு காட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement