பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லைலா.? அவரே சொல்லிட்டார் பாருங்க.!

0
876
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for actress laila bigg boss

சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காண புரோமோ சூட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்று செய்திகள் வெளியானது.

- Advertisement -

அதே போல இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அதில் பிரபல நடிகை லைலா கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை நடிகை லைலா மறுத்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது போன்ற பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவது இல்லை. விளம்பரத்திற்காக இப்படி கேவலமாக செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement