தமிழகம் எங்கும் பல இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகளை நடத்தி வரும் பிரபல இசைக்குழு தான் லக்ஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் லக்ஷ்மணன் மற்றும் ராமன் ஆவார். மேலும், பிரபல இசை கச்சேரியான லக்ஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். தற்போது லட்சுமன் ஸ்ருதி இசை கச்சேரி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லக்ஷ்மன் ஸ்ருதி என்ற இசை நிறுவனத்தை ராமன் அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோர் இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.

Advertisement

இந்த லட்சுமன் ஸ்ருதி இசை நிறுவனம் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளை நடத்தி பிரபலமடைந்த நிறுவனம் ஆகும். இந்த இசைக் கச்சேரியில் மூத்தவர் தான் ராமர். இவர் சென்னையில் உள்ள அசோக் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், இந்த இசை கச்சேரி நிகழ்ச்சி பாதியிலேயே ராமன் அவர்கள் வீடு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய அவர் திடீர் என்று தன்னுடைய அறைக்கு சென்றார். பின் பல நேரம் கழித்தும் அவர் வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் ராமன் அறைக்கு விரைந்து சென்றனர்.

இதையும் பாருங்க : சிவாஜியுடன் இந்த படத்தில் அஜித் தான் நடிப்பதாக இருந்ததாம். கடைசியில் நடிச்சது இவர் தான்.

அங்கு சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு தொங்கிய நிலையில் ராமன் இருந்து உள்ளார். பின் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமனை கொண்டு சென்று சேர்த்தனர். அவருடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ராமன் ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்கள். போலீசார் ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமில்லாமல் ராமனுக்கு ஏற்கனவே நீண்ட காலமாக சர்க்கரை நோய், இருதய அடைப்பு மூலம் பல அவதிப்பட்டு வந்து உள்ளார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

ராமன் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் தற்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை பணம் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடைய திடீர் மரணம் பயங்கர பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலையால் இவருடைய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைத்துறையை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement