நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீ – என்ட்ரி கொடுத்துள்ள லட்சுமி மேனன் – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
345
lakshmi
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் பற்றி சர்ச்சை கருத்து :

நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இவர் கடந்த பிக் பாஸ் 4ல் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார். அதில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை நான் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ மற்றவர்களுக்காக கழிவறை கைகழுவவோ எப்போதும் மாட்டேன்.

திட்டி தீர்த்த ரசிகர்கள் :

அதேபோல நிகழ்ச்சி என்ற பெயரில் கேமராவுக்கு முன்னால் சண்டை போடவும் மாட்டேன்.இந்த குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று யாரும் என்னிடம் பேச்சை எடுத்து வராதீர்கள் என்று கூறியிருக்கிறார். லட்சுமி மேனனின் இந்த கருத்து ரசிகர்களை கொஞ்சம் கோபமாகியுள்ளது. பிக் பாஸில் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரர் விருப்பம். ஆனால், அதை சொல்லும் முறை என்று இருக்கிறது என்று பலரும் திட்டி தீர்த்து வந்தனர்.

-விளம்பரம்-

உடல் எடை குறைப்பு :

தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் லட்சுமி மேனனின் சில லேட்டஸ்ட் புகைடபங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். விரைவில் நீங்கள் come back கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிக அளவு நடிக்காத லட்சுமி மேனன் தற்போது மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

புதிய படம் :

ஆதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் அடுத்த திரைப்படமான ’சப்தம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆதி ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தமன் இசையமைக்கும் இந்த படம் லட்சுமிமேனனுக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement