வேறு ஒரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மையா.! விளக்கமளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

By Rajkumar · 11/3/2019

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை ' நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் பல தமிழ் படங்களிலும் . நடிகராக நடித்துள்ள இவர், தமிழில் 3 பாடங்களையும் இயக்கியுள்ளார். 

இதையும் படியுங்க : இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்னன்.! 90 ml படத்திற்கு ஏன் எதுவும் சொல்லவில்லை.! 

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலகப்போவதாக கடந்த ஆண்டு புதன்கிழமை (ஜூன்5) லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற் போல இந்த நிகழ்ச்சியின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவீர்களா என்ற கேள்விக்கு சமீபத்தில் விடையளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்கபோகிறேன் என்று வதந்திகள் வருகிறது. இந்த நிகழ்ச்சியை வேறு சில தொலைக்காட்சியில் நடத்த கூட என்னை அணுகினார்கள் ஆனால், அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனி கண்டிப்பாக நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full