சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்..! அவரே சொன்ன உண்மை..?

0
875
lakshmi-ramakrishnan

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

solvathelam unmai

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ள இவர், தமிழில் 3 பாடங்களையும் இயக்கியுள்ளார்.

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலகப்போவதாக கடந்த புதன்கிழமை (ஜூன்5) லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதால், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற் போல இந்த நிகழ்ச்சியின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதனால் அந்த நிகழ்ச்சிக்கு வரும் ஜூன் 17 தேதி வரை நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு அடுத்தநாளான ஜூன் 18 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற உள்ளது. இந்த காரணத்தால் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தாரோ என்று பலரும் சந்தேகித்துள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் பிரேச்சனை நீதி மன்றத்தின் வரை சென்றுள்ளது.

lakshmi ramakrishnan

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகிழ்ச்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட போது ‘என்னுடைய அடுத்த இயக்குனர் அவதாரத்தை நான் மீண்டும் முழு வீச்சில் எடுத்துள்ளேன், சில நாட்களுக்கு நான் சமூக வலைதளத்தில் அக்டிவாக இருக்க மாட்டேன். நிகழ்ச்சியை பொறுத்த வரை, இது ஒரு இடைக்கால தடை தான். எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் தெளிவு படுத்த வேண்டும். அதனை சேனல் பார்த்துக்கொள்ளும். நான் முன்னோக்கி செல்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.