தமிழ் படமா இல்ல PORN படமா..? படக்குழுவினரை வெளுத்து வாங்கிய பிரபல பிரச்சனை நடிகை..!

0
2441

தமிழ் சினிமாவின் புதிய இரட்டை மொழி வசனத்தை ஒட்டு மொத்தமாக குத்தைகை எடுத்துள்ள இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.ஏற்கனவே “ஹார ஹார மஹாதேவிகி” என்ற படத்தை இயக்கிய போதே இளைஞசர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் இந்த பாடத்தின் இயக்குனர்.

Lakshmy_Ramakrishnan

அதே போல இந்த படத்தின் டீஸர் வெளியான காலத்தில் இருந்தே இளைஞசர்கள் மத்தியில் பெரும் வரவேர்ப்பை பெற்றது. மேலும் எப்போது இந்த படம் வெளியாக போகிறது என்று அணைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த படம் வெளியாகி திரையரங்குகளில் தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறது. அடல்ட் செஸ் காமெடி படமாக வெளிவந்துள்ள இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஒரு சில எதிர்ப்புகளும் வலுத்துள்ளது.

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான “என்னமா இப்படி பண்றீங்களே மா” புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தின் மீதான தது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டிருந்த அவர் “சில நாட்களுக்கு முன்னர் தமிழில் செஸ் காமெடி படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அது 15 கோடி வசூல் சாதனையும் செய்துள்ளது. அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு , படக்குழுவிற்கும் இப்படி ஒரு பொறுப்பான படத்தை தந்ததற்கு நன்றி .

இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகளான ஹாசினி மற்றும் நந்தினி மற்றும் பல பிள்ளைகளுக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் “ஏன் உங்களால் ஆபாசம் இல்லாமல், கொச்சையான வசனங்கள் இல்லாமல் படம் எடுக்க முடியாத ” என்று பட குழுவை நாறுநாராக கிழித்துள்ளார்.