பிரபல தொழிலதிபர் லலித் மோடியுடன் பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் டேட்டிங் சென்று இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார். மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

Advertisement

இதையும் பாருங்க : கைகொடுக்காத இரண்டு திருமணம் – இன்று தன்னந்தனியாக இறந்த பிரபல நடிகர் பிரதாப் போத்தன்.

பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் 2010 அன்று அலிசா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஸ்மிதா சென் ‘அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்தித்து உள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன்.

Advertisement

திருமணம் செய்துகொள்ளாத காரணம் :

இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளி அளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் செல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார் என்று கூறி இருந்தார்.

Advertisement

ஐபிஎல் முன்னாள் தலைவருடன் டேட்டிங் :

இப்படி ஒரு நிலையில் பிரபல தொழிலதிரும் நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி சுஸ்மிதா சென்னை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இப்போதுதான் மாலத்தீவு உட்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். என்னில் பாதியான(#betterhalf @sushmitasen47) சுஷ்மிதா சென் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.

விரைவில் திருமணம் :

சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். ‘ நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா என கேள்வி எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த ட்விட்டர் பதிவில் ‘நாங்கள்இன்னும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது இருவரும் டேடிங்கில்தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

10 ஆண்டுக்கு முன் போட்ட ட்வீட் :

அதே போல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுஸ்மிதா சென்னின் ட்விட்டர் பக்கத்தில் லலித் மோடி பதிவிட்டு கமன்ட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில் ‘என்னுடைய MMS க்கு ரிப்ளை செய்யுங்கள்’ என்று லலித் மோடி பதிவிட்டு இருக்கிறார். இதனை தற்போது சுட்டி காட்டி வரும் நெட்டிசன்கள். 10 ஆண்டுக்கு முன் எடுத்த முயற்சி தற்போது கைகொடுத்து இருக்கிறது என்று கமன்ட் போட்டு வருகின்றனர். லலித் மோடிக்கு 56 வயதாகிறது. சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement