என்னது லெஜெண்டுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்குகிறாரா லலிதா ஜீவல்லரி ஓனர் – அவரே சொன்ன பதில்.

0
714
lalitha
- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி கடைகள் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் தி லெஜெண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் படம் எடுக்கப்பட்டிருந்தது. திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

Legand

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகியது.
தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானி பான் இந்திய படமாக மாறியுள்ளது. ஆனால், படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

-விளம்பரம்-

நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார்:

இந்த நிலையில் இவரைப் போலவே பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண் குமாரும் தனது கடையின் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவருக்கும் இணையத்தில் மிகப்பெரிய பாப்புலாரிட்டி இருக்கிறது. அதிலும் சிலர் இவரை சிவாஜி ரஜினி கெட்ட போல அவரது தோற்றம் இருக்கிறது என்று எல்லாம் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கிரண் குமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

சினிமா குறித்து கிரண் குமார் கூறியது:

அதில், உங்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? எனக் கேட்டிருந்தார். அதற்கு அவர், அந்த ஆசை சுத்தமாக இல்லை. என்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது. இப்போது இருக்கும் இடமே போதும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் இவர் சினிமாவுக்குள் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. நல்ல வேல இனி லெஜண்ட்க்கு யாரும் போட்டி இல்லை.

Advertisement