தமிழகத்தின் கடைசி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் எலாம் முடக்கப்பட்டு ஜமீன்தார் முறையும் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடியவர் முருகதாஸ் தீர்த்தபதி தான். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தார்.

இந்திய சுதந்திரம் அடையும் முன்பே சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர் ஆவார். அதாவது இவர் தனது 3 வயதிலேயே ராஜாவாக மூடி சூட்டினார். ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி.

Advertisement

தற்போது ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி விவசாயம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரண்மனை அருங்காட்சியகமாக செயல் பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது 89 வயதாகும் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி வர்கள் நேற்றிரவு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

இவர் நல்ல மனிதர், பண்பாளர், கம்பீரமானவர். இவரின் மறைவுக்கு சோசியல் மீடியாவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவருடைய வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு தான் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் சீமராஜா திரைப்படம் எடுக்கப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பதிவில், “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement