பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய முக்கிய நடிகர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

0
551
poniyin selvan
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது. 

-விளம்பரம்-

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். 

- Advertisement -

கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார். தற்போது வரை இந்த படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி மற்றும் சிம்பு மட்டும் கமிட் செய்யப்ட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. 

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால்,
நடிகர் விஜய் இப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில் விஜய் சேதுபதியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-விளம்பரம்-
Advertisement