இன்னும் ஒரு சில நாட்களில் தளபதி 65யின் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

By Rajkumar · 2/7/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய்யின் 64வது படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக நம்பகரமான ஏற்கனவே வெளியாயானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கைதி படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது.

விஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியயிருந்தது.

இதையும் பாருங்க : மனைவியை கட்டி அணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நகுல்.! வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விஜய் 65 படத்தின் சில தகவல்கள் வைரலாக பரவி வந்தது. விஜய் 65 படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார் என்றும் அந்த படம் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் நம்பகரமான சில தகவல் வெளியாகி வருகிறது.

மேலும், விஜய் 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் இந்தியன் 2 போலவே 'முதல்வன் 2' எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.

https://twitter.com/RaviVijayAddict/status/781074066786705408

அதற்கு பதிலளித்த ஷங்கர், அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பது பாதி சதவீதம் சங்கர் ஏற்கனவே உறுதி செய்துவிட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full