மனைவியை கட்டி அணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நகுல்.! வைரலாகும் புகைப்படம்.!

0
3638
Nakul
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படம் ‘பாய்ஸ்’. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலமே பரத், மணிகண்டன், சித்தார்த் என்று பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல்.

-விளம்பரம்-

பாய்ஸ் படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்த நகல் இன்று தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டாக இருந்த நகுல் அதன் பின்னர் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் தனது உடலை முற்றிலும் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

- Advertisement -

காதலில் விழுந்தேன் படத்திற்கு பின்னர் தமிழில் மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் நகுல். மேலும், நடிகர் நகுல் பிரபல நடிகையான தேவயானியின் சகோதரர் என்பது தெரியும் ஆனால் நகுலின் மனைவியை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் தனது மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நகுல்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லை, நடிகர் நகுலின் மனைவி, 2018 ஆம் நடைபெற்ற FaceOfChennai என்ற பட்டத்தை கூட வென்றுள்ளாராம். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் நகுல், தனது மனைவியை கட்டி அணைத்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement