ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் அரசியலில் குதிக்கிறார்.

ரஜினியின் அரசியல் வருகை பற்றிய செய்தி தான் அணைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறது. ரஜினியின் அரசியில் வருகைக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் அடுத்த ஒரு பிரபலம் தனது அரசியல் வருகையை பற்றிய செய்தியை அறிவித்துள்ளார்.

RaghavaLawrence

ரஜினிகாந்தின் காவலனாக நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் நுழைய போகிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, ஜனவரி 4ஆம் தேதி, அம்பத்தூரில் உள்ள அவரது ராகவேந்திரா கோவிலில் அறிவிக்க போகிறார்.

lawrance

இது அரசியல் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த பின்பு தான் எந்த முடிவிற்கு ராகவா லாரன்ஸ் வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

Raghava Lawrence

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரை பற்றியும் இவரது அரசியல் வருகை குறித்தும் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.