கசிந்தது மெர்சல் படத்தின் கதை – கதை இது தான் !

0
7574
Mersal

மெர்சல் திரைபடம் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது . அதன் பணிகளில் மும்முரமாக இடுபட்டுள்ளது படக்குழு. இப்படத்தை பற்றி தயாரிப்பு நிறுவனம் ஒரு தகவலை வெளியிடுகிறது , இயக்குனர் அட்லி ஒன்று வெளியிடுகிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை பற்றி சுவாரசியமான தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
Mersalஇந்நிலையில் சமூகதள வாசிகள் பங்கிற்கு படத்தின் கதை லீக் ஆனதாக கதையொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளானர்.

சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கிறார்.அந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல, இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வருகின்றது.

இதையும் படிங்க: மெர்சல் பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியம்..? ட்வீட் செய்த பாடகர் !
Mersal
பிறகு பளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டை குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார்.

ஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளை செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.
Mersalஇதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதை தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜய்யை தூக்கி சென்று சென்னையில் வளர்க்கின்றார், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துக்கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே மீதிக்கதை’ என ஒரு கதை உலா வர, இது உண்மையா என்பது யாருக்கும் தெரியவில்லை.