மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிடுள்ளது. நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து தற்போதும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. 

தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : பிராமிணர்கள் மட்டும் தான் இந்த பள்ளியில் படிக்க வேண்டுமா ? PSBB பள்ளியின் விளம்பர வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.

Advertisement

ஆனால்,அப்போதும் மக்களின் அலட்சியத்தால் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் மேலும், ஒரு வாரத்திற்கும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக பலரும் திருமணத்தை கோவில்களில் எளிமையாக நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்தில் 20 பேர் மட்டும் தான் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் – தீக்‌ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்தனர்.சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்பிரதாயப்படி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Advertisement

கொரோனா பிரச்சனை இருக்கும் நிலையில் இப்படி ஒரு திருமணம் தேவையா என்று பலரும் கூறி வந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. புகார் அளிக்கவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆடம்பர தம்பதிகளில் தற்போது விமான ஊழியர்களின் வேலைக்கு ஏற்கப்பட்டுள்ள ஆப்பால் பலரும் மதுரை தம்பதியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement
Advertisement