தி லெஜன்ட் படத்தின் வாடி வாசல் பாடல் அஜித்தின் ‘வேற மாறி’ பாடலின் வாழ்நாள் சாதனையை வெறும் 10 நாளில் முறியடித்து இருக்கிறது. டிவி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : மீண்டும் அருண் விஜய்யை நெகிழிச்சியில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன் – என்னப்பா ‘முஸ்தபா முஸ்தப்பா’ ரேஞ்சுக்கு போய்ட்டாங்க போல.

Advertisement

தி லெஜன்ட் படம்:

இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார்.
விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி வருகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், இவர்கள் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி லெஜன்ட் படத்தின் நடிகர்கள்:

சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

Advertisement

ஹரிஸ் ஜெயராஜ் இசை பாடல்:

இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையில் மோசலோ மோசலு, வாடிவாசல் பாடல் வெளியாகி இருந்தது. இதில் வாடி வாசல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் அஜித்தின் வேற மாறி பாடலின் வாழ்நாள் சாதனையை 10 நாளில் முறியடித்து இருக்கிறது

Advertisement

அஜித் பாடலை முறியடித்த லெஜண்ட் :

வலிமை படத்திற்கு யுவன் தான் இசையமைத்தார் என்று பலரும் நினைத்தனர். ஆனால், இந்த படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வேற மாறி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியாகி 2 மாதத்தில் 13மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்று இருக்கிறது. ஆனால், லெஜண்ட் படத்தின் வாடி வாசல் பாடல் 10 நாளில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வேற மாறி படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இருக்கிறது.

Advertisement