மீண்டும் அருண் விஜய்யை நெகிழிச்சியில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன் – என்னப்பா ‘முஸ்தபா முஸ்தப்பா’ ரேஞ்சுக்கு போய்ட்டாங்க போல.

0
544
sk
- Advertisement -

பல ஆண்டுகளாகவே சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவரும் பிரச்சனை இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அதை முறியடிக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் பதிவு அமைந்துள்ளது. தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is as.jpg

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : சொந்த வீட்டை விற்று பெட்டிக்கடை போட்டு மருத்துவ செலவை பார்த்து வரும் மனைவி – வெண்ணிலா கபடிக்குழு நடிகரின் பரிதாப நிலை. என்ன ஆச்சி இவருக்கு ?

- Advertisement -

அருண் விஜய்யின் மறைமுக ட்வீட் :

இதனை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இப்படி சினிமாவில் சிவா உச்சத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நுழைய பல போராட்டங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து மறைமுக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-223-732x1024.jpg

யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்ல :

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அருண் விஜய் கொடுத்த விளக்கம் :

ஆனால், அருண் விஜய் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தார். இருப்பினும் அருண் விஜய், சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அந்த பதிவை போட்டார் என்று பலரும் தற்போது வரை நினைத்துகொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருண் விஜய் மற்றும் சிவகார்திகேயன் இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன Sk :

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் ‘உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரதர். அர்னவ்விற்கு உங்கள் கனிவான வாழ்த்துக்களை நிச்சயம் தெரிவிக்கிறேன்’ என்று பதில் அளித்து இருந்தார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஒருவழியாக பல ஆண்டு சர்ச்சைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என்று கூறி வந்தனர்.

மீண்டும் Sk செய்த செயல் :

மேலும், சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை பலரும் பாராட்டினார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது அருண் விஜய், ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலரை பல பிரபலங்கள் ரிலீஸ் செய்தனர். அந்த வகையில் சிவகார்த்திகேயனும் இந்த ட்ரைலரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அருண்விஜய் நன்றி தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement