என்ன அண்ணாச்சி விஜய்க்கே போட்டியா ? அண்ணாச்சி வெளியிட்ட selfie கேலி செய்த அஜித் ரசிகர்கள். கடுப்பான விஜய் ரசிகர்கள்.

0
378
vijay
- Advertisement -

விஜய்க்கு போட்டியாக லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் படத்தின் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

வாரிசு படம்:

இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல இயக்குனர்களிடம் சரவணன் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் காப்பியடித்து லெஜன்ட் சரவணன் செய்து இருக்கும் செயல் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது விஜய் அவர்கள் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விஜயை காப்பியடித்த அண்ணாச்சி :

இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய் ஹேர் ஸ்டைலை காப்பி அடித்து லெஜெண்ட் சரவணனும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது ஷூட்டிங் போது எடுக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன ஆண்ணாச்சி விஜய்க்கே Tough கொடுக்குறீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், அஜித் ரசிகர்கள் விஜய்யுடன் அண்ணாச்சியை ஒப்பிட்டு கேலி செய்ய விஜய் ரசிகர்கள் கடுப்பாகி இறுகின்றனர்.

Advertisement