விஜய் அஜித்திற்கு போட்டியாக ஹீரோவாக களமிறங்க போகும் லெஜண்ட்.!

0
2178
Arul-Saravanan
- Advertisement -

கிராமத்து வீடு முதல் நகரத்தில் உள்ள வீடு வரை சரவணா ஸ்டோர்ஸ்ஸின் கடை பை இல்லாத வீடுகளே இருக்காது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஜவுளிக்கடைகளை நடத்தி வரும் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் விரைவில் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார் என்ற செய்தி தான் தற்போது ஹாட் டாபிக்.

-விளம்பரம்-
Related image

பிரபல ஜவுளி நிறுவன ர்செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்.! குளியல் டவலில் கொடுத்த போஸ்.! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

இவர் வருவதற்கு முன்பாக தங்களது கடை விளம்பரங்களை நடிகைகளை நடிக்க வைத்து வந்தனர். பின்னர தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிக்க துவங்கினார் லெஜண்ட் அருள். அந்த விளம்பரத்தை அடுத்து பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். 

Image result for saravana stores owner

ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வந்தார் அருள். மேலும், இவர் விரைவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக சில செய்திகள் வெளியானது. விரைவில் 30 கோடி செலவில் உருவாக போகும் ஒரு படத்தில் தான் ஹீரோவாக நடிக்க போவதாக அண்ணாச்சி அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த படத்தினை விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ‘உல்லாசம் ‘ படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது ஹன்சிகாவாகவும் இருக்கலாம் இல்லை நயன்தாராவாக இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

Advertisement