இவன் பேர பறிக்க நாலு பேரு,பட்டத்த பறிக்க கோடி பேரு – குழந்தைகளுடன் ஜெயிலர் பாடலுக்கு டான்ஸ் ஆடிய லெஜண்ட்.

0
1254
Legend
- Advertisement -

சுதந்திர தினத்தை முன்னிட்டு லெஜண்ட் சரவணன் குழந்தைகளுடன் ஆட்டம் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கதையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சுதந்திர தின கொண்டாட்டம் :

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு லெஜண்ட் சரவணன் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். பின்னர் அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் சிறுவன் ஒருவன், உங்கள் தி லெஜண்ட் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. உங்களுடைய அடுத்த படம் குறித்துசொல்லுங்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த சரவணன், நல்ல கதைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்.

அப்டேட் சொன்ன லெஜண்ட் :

தற்போது அது கிடைத்துவிட்டது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் படத்தை வெளியிடுகிறேன் என வாக்குறுதி அளித்தார். அதே போல குழந்தைகள் பலரும் தங்களுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைபட்டதால் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடலுக்கு குழந்தைகளுடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சரவணன்.

Advertisement