‘எல்லாம் வெற்றிக்கு தான் ‘ – உடல் எடை குறைத்து படு ஸ்மார்ட்டாக மாறிய லெஜண்ட் – அடுத்த படத்துக்கு தயார் ஆகிவிட்டார் போலயே.

0
324
Thelegend
- Advertisement -

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், படத்தில் ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் படத்தின் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சரவணன் நடிக்கும் அடுத்த படம்:

இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் நடித்த தி லெஜண்ட் படத்தில் அதிரடி, ஆக்சன் நாயகனாக அருள் மிரட்டி இருப்பார். தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதைய அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது.

வைரலாகும் புகைப்படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சரவணன் அருள் யூத் ஆக நடிக்கிறாராம். இதனால் சரவணன் அண்ணாச்சி அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதை லெஜெண்ட் சரவணன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்தில் வியந்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement