லெஜண்ட்டின் அடுத்த படம். SK, தனுஷ் பட இயக்குனரை தட்டி தூக்கிய அண்ணாச்சி. சூரி படம் முடிந்ததும் படப்பிடிப்பு

0
512
- Advertisement -

லெஜெண்ட் சரவணன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-
Legend

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே ஒரு பட நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் தி லெஜெண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

தி லெஜன்ட் படம் விமர்சனம்: மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு, கன்னடம், இந்த ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறியுள்ளது. படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சரவணன் அருள் நடிக்கும் அடுத்த படம்:

இந்த படத்தின் மூலம் சரவணன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. லெஜண்ட் சரவணனின்  அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Sk தனுஷ் பட இயக்குனர் :

இயக்குனர் துரை செந்தில்குமார் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘கருடன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணனை வைத்து படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement