ரஜினி-லோகேஷ் கூட்டணி படத்தை உறுதி செய்த லியோ பட நடிகர் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க

0
1358
Lokesh
- Advertisement -

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து லியோ பட பிரபலம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ரஜினி நடிக்கும் படங்கள்:

மேலும், இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குவதாக கூறப்படுகிறது.

ரஜினி-லோகேஷ் கூட்டணி:

மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்புகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

-விளம்பரம்-

மிஸ்கின் அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து லியோ படத்தில் நடிக்கும் மிஸ்கின் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்தவுடன் ரஜினியின் படத்தை தான் அவர் இயக்க இருக்கிறார். விஜய் நடித்த யூத் படத்தில் நான் பணியாற்றி இருந்தேன். அப்போது அவர் வளர்ந்து வரும் ஒரு ஸ்டாராக இருந்தார்.

விஜய் குறித்து சொன்னது:

இப்போது அவர் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். நான் லியோ படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது என்னை அவர் கட்டிப்பிடித்து வரவேற்றார். அப்போது நான் அவரை ஒரு ஸ்டாராக பார்க்கவில்லை. ஒரு குழந்தையாக தான் அவர் எனக்கு தெரிந்தார் என்று கூறியிருக்கிறார். இப்படி மிஸ்கின் அளித்த பேட்டியின் மூலம் ரஜினி-லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Advertisement