சினிமா உலகில் பொருத்தவரையில் வில்லன் என்றாலே பலரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து இருப்பார்கள். அதுவும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்களை மக்கள் மறப்பதில்லை. அந்தவகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் செல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரவி சங்கர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனரும், எழுத்தாளரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான கெம்பே கவுடா என்ற திரைப்படத்தின் மூலமாக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ் என இரு மொழி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டும் இல்லமால் தமிழ் சினிமாவில் நாம் கேட்கும் பல்வேறு நடிகர்களில் குரலுக்கு சொந்தக்காரர் ரவிசங்கர். இவர் நடிகர் என்று சொல்வதைவிட டப்பிங் கலைஞர் என்று சொல்வது தான் நியாயமாக இருக்கும். அந்த அளவிற்கு பல நடிகர்களுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். ஆனால், இவர் பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் என்பது தான் பலரும் அறிந்திராத விஷயம்.

Advertisement

ரவிசங்கரின் திரைப்பயணம்:

தமிழ் தெலுங்கு மட்டுமல்ல இவர் ஹாலிவுட் படங்களுக்கு கூட டப்பிங் கொடுத்திருக்கிறார். 1995 ஆம் ஆண்டு வெளியான ஜுராஸிக் பார்க்கின் தமிழ் வெர்ஷனில் நடிகர் ரவிசங்கர் ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த Jeff Goldblum நடிகருக்கு டப்பிங் கொடுத்திருந்தார். மேலும், தமிழைப் போன்றே இவர் தெலுங்கிலும் பல்வேறு படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார. தெலுங்கில் ரகுவரன், பிரகாஷ்ராஜ், அர்ஜுன் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்ததும் நடிகர் ரவி சங்கர் தான்.

ரவிசங்கர் குரல் கொடுத்த நடிகர்கள்:

மேலும், ஹிந்தி நடிகரான சோனு சூட்டுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் கொடுப்பது ரவிஷங்கர் தான். மேலும், நடிகர் ரவிசங்கரின் சிறப்பு நடிகர்களுக்கு ஏற்றாற்போல டப்பிங் கொடுப்பது என்று சொல்லலாம். உதாரணமாக பாபா படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே இருவருக்கும் ரவிசங்கர் தான் டப்பிங் கொடுத்திருந்தார். அதேபோல தூள் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் மற்றும் அரசியல்வாதியாக வரும் ஷாயாஜி ஷிண்டே இருவருக்கும் டப்பிங் கொடுத்திருந்தார் . பின் அழகிய தமிழ் மகன் படத்தில் கூட ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சாயாஜி ஷிண்டே இருவருக்கும் டப்பிங் கொடுத்திருந்தார்.

Advertisement

ரவிசங்கர் எழுத்தாளராக பணியாற்றிய படங்கள்:

இப்படி ஒரு படங்களில் இரண்டு நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் நடிகர் ரவி சங்கர். இதுவரை இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதில் 150க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படம் உண்டு. இவர் சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்காக 9 முறை மாநில நந்தி விருதை வென்றுள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் வசனம் எழுத்தாளராக 75க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் பணி புரிந்து உள்ளார்.

Advertisement

ரவிசங்கர் குடும்ப புகைப்படம்:

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட சஞ்சய் தத்திற்கு இவர் தான் டப்பிங் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இவர் சுசில் புதிபெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆத்வே புதிபெட்டி என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகர் ரவி சங்கர் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வில்லனாக நடித்த இவருக்காக இவ்வளவு அழகான குடும்பம்! இவருடைய மகன் பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கிறார் என்றெல்லாம் கமென்ட் போட்டும், ரவிசங்கர் குடும்ப புகைப்படத்தை லைக்ஸ் செய்தும் வைரலாக்கியும் வருகிறார்கள்.

Advertisement