இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்து இருக்கிறார். இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கவினின் லிப்ட் படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்….



கதைக்களம் :

Advertisement

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வரும் ஐடி ஊழியரான கவின்(குரு)ஒரு புதிய ஐடி கம்பனியில் டீம் லீடராக வருகிறார். மேலும், பல மாதங்கள் முடிக்கப்படாதா ஒரு புராஜெக்டை முடித்துக் கொடுக்க அந்த கம்பெனியில்அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது. அதே கம்பெனியில் எச்.ஆராக வேலை பார்த்து வருகிறார் ஹரிணி (அம்ரிதா). கவின் மற்றும் அமிர்தா இவருக்கும் ஏற்கனவே ஒரு சிறிய பிளாஸ் பேக்கில் ஒரு சிறு மோதல் இருப்பது போல காட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் இவர்கள் இருவரில் அமிர்தாவிற்கு கவின் மீது கிரஷ் வருகிறது. ஆனால், அதை கவின் மறுத்துவிடுகிறார். இப்படி சென்று கொண்டு இருக்க ஒருநாள் இரவு கம்பெனியில் ப்ராஜக்டை முடிக்க வேண்டிய கட்டாய சூழலில் கவின் இருந்ததால் கம்பெனியிலேயே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். வேலை முடிந்த பிறகு இரவு திரும்ப செல்ல கவின் லிப்டில் செல்கிறார். அப்போது லிப்டில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.

Advertisement

பின் கொஞ்ச நேரத்தில் லிப்டில் கதாநாயகி அமிர்தாவும் வருகிறார். அமிர்தா என்னை ஏன் அறையின் உள்ளே விட்டு பூட்டி விடுகிறார் என்று கேட்கிறார். அதற்கு கவின் நான் எதுவும் செய்யவில்லை இங்க நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது என்று சொல்கிறார். ஆனால், ஆரம்பத்தில் அமிர்தா அதை நம்பவில்லை. பின் பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதற்காக இவர்கள் கேம் விளையாடுகிறார்கள். அப்போது பேய் இருக்கிறது என்று தெரிய வருகிறது. உடனே இவர்கள் கம்பெனியிலேயே சுற்றிக் சுற்றிதப்பிக்க சுற்றி சுற்றி அலைகின்றனர்.

Advertisement

லிப்டில் இவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று பேய் தான் முடிவு செய்கிறது. அப்படியே பல மணி நேரம் லிப்ட்டிலேயே செல்கிறது. பிறகு டிவியில் 3 மணிக்கு கவின், அமிர்தா இறந்தது போல் செய்தி ஒளிபரப்பாகிறது. ஆனால், அப்போது 12 மணி தான் ஆகிறது. அதை பார்த்து இருவரும் பயந்து போகிறார்கள். இதனுடைய அங்கு 2 பாதுகாவலர்களும் இவர்கள் கண் முன்னே இறந்துவிடுகிறார்கள். உடனே இருவரும் நாம் இங்கு இருந்து தப்பித்து வெளியே போய்விடலாம் என்று பல விதத்தில் முயல்கின்றனர். ஆனால், எவ்வளவோ முயன்றும் அவர்கள் மாறிமாறி அலுவலகம் மற்றும் லிப்டில் தான் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். இறுதியில் டிவியில் காண்பிப்பது போல இருவரும் இறந்தார்களா ? இல்லை அந்த அலுவலகத்தில் இருந்து தப்பித்தார்களா ? பேய் இவர்கள் இருவரை ஏன் டார்கெட் செய்து பயமுறுத்துகிறது போன்ற விஷயங்களை அடங்கியதே மீதிக்கதை.

பிளஸ் :

முதல் பிளஸ் படத்தின் ஹீரோ ஹீரோயினாக வரும் கவின் மற்றும் அமிர்தா தான். இருவரும் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி நம்மை கவர்ந்துவிட்டனர்.

குறிப்பாக கவின், கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என்று தன் நடிப்பில் 100% கொடுத்து இருக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு பாடல் என்பது ஆறுதல், இன்னா மயிலு பாடல் படத்தின் இறுதியில் தான் வருகிறது .

படத்தின் கேமரா மற்றும் ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசை மூலமே பல இடங்களில் பயம்புறுதி இருக்கிறார் இசையமைப்பாளர் மைக்கேல் பிரிட்டோ

மைனஸ் :

படத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தில் Edge Of The Seat என்று சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் இல்லை

ஒரு சில லாஜிக் மீறல்கள், குறிப்பாக பேய் பயத்தில் இருக்கும் போது நினைவுக்கு வராத லைட்டர்

அதே மரண பயத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது லைட்டரை வைத்து வாழ்த்து சொல்லும் காட்சி கொஞ்சம் ஓவர்.

கஞ்சாவை வைத்து பேயை விரட்டுவது புதுமையாக இருந்தாலும் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

இறுதி அலசல் :

கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கொடுக்கும் வேலை பலு, மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் IT ஊழியர்கள் என்று சோசியல் மெசேஜ்ஜை சொல்லி இருக்கிறது இந்த படம். மொத்தத்தில் ‘லிப்ட்’ திரைப்படம் கொஞ்சம் டாப் ப்ளோரை தொடவில்லை என்றாலும் ஒரு நடிகனா கவினை டாப் ப்ளோருக்கு கொண்டு சென்று இருக்கிறது. படத்தை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம் கொஞ்சம் பொறுமையும் வைத்துக்கொண்டு.

Advertisement