விஜய்யின் சர்கார் வெளியாக இருக்கும் திரையரங்க லிஸ்ட் இதோ..!இதிலும் சாதனை தான் போங்க..!

0
366
Sarkar

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்கார் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் வரும் தீபாவளி அன்று உலக அளவில் வெளியாக இருக்கிறது.

Sarkarusa

படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரத்திற்குள் படம் தணிக்கை குழுவிற்கு சான்றிதழுக்காக அனுப்பபடுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் சர்க்கார் படம் 200கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படம் அமெரிக்காவில் அக்டோபர் 5 ஆம் தேதியே வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் அமெரிக்க வெளியிட்டு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் அமெரிக்காவில் சர்கார் வெளியாகும் திரையரங்குகளில் பெயர் பட்டியலை வெளியட்டுள்ளனர். இது வெறும் தமிழ் மொழியின் வெளியிட்டு லிஸ்ட் தான் என்றும் இன்னும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கும் லிஸ்ட் விரைவில் வெளியிடபடவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதோ அதன் விவரம்