அஜித்துடன் படம் ? 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கனவு படம், லியோ Lcu கனக்க்ஷன் – அடுக்கடுக்கான அப்டேட் கொடுத்த லோக்கி.

0
2023
- Advertisement -

கல்லூரி நிகழ்ச்சியில் தன்னுடைய புது படங்கள் குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குறும்பட தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார்.

- Advertisement -

லோகேஷ் திரைப்பயணம்:

அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

லியோ படம் :

மேலும் இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதை அடுத்து ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கூறியது:

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், கூறியிருந்தது, அனைவரையும் பார்ப்பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நான் முதலில் பணிக்கு சேர்ந்தேன். இது எனக்கு நெருக்கமான இடம்தான். கல்லூரியில் முதல் மூன்று ஆண்டு ரொம்ப முக்கியமான ஒன்று. எல்லோரும் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்ற தேவை இல்லை. உங்க ஹார்ட் சொல்வதை கேளுங்கள். கோவையில் நிறைய மாற்றம் வந்திருக்கின்றது.

புது படங்கள் குறித்து சொன்னது:

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சென்னை தான் போக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அது மாற வேண்டும். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகுவது உங்களுக்கே தெரியும். லியோவிற்கு அடுத்து ஒரு பெரிய அப்டேட் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன். லியோ LCUயில் வருகிறதா இல்லையா என்பதை சொல்ல இன்னும் மூன்று மாத காலம் இருக்கிறது . கைதி 2 அடுத்த படம் முடித்த பிறகு எடுக்க இருக்கிறேன். என்ன நமக்கு தோன்றுகிறதோ அதை பண்ண வேண்டும். மேலும், ஒவ்வொரு ஹீரோவையும் வைத்து படம் பண்ணனும் தான் நினைக்கிறேன். இரும்பு கை மாயாவி படத்தின் கதையை எழுதி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் என்றே சொல்லலாம் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

Advertisement