கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அதிகாரபூர்வ அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
397
- Advertisement -

கைதி 2 குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் அப்டேட் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் அதிக அளவில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற குறும்படத்தின் மூலம் தான் தொடங்கினார். அதன் பின் இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை என்ற இயக்கி இருக்கிறார் லோகேஷ்.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் பாணியில் இருந்தது. விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் இயக்கும் படம்:

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்டுகான வேலையில் தான் லோகேஷ் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் கம்போஸ் , வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

-விளம்பரம்-

லோகேஷ் பேட்டி:

நேற்று தான் இந்த பாடல் வெளியாகி காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ஆல்பம் பாடலின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரஜினி, கைதி 2 குறித்து பல கேள்விகளை கேட்டிருந்தார்கள். அதற்கு லோகேஷ், ரஜினி சாரோட படத்துக்காக நான்கு முதல் ஐந்து மாதங்களாக தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். ரஜினி சார் படத்தை முடித்த பிறகு ஒரு மாதம் இடைவெளி எடுத்து கைது படத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன்.

கைதி 2 குறித்து சொன்னது:

ரஜினி சார் படத்தின் கதைக்கு முன்பே கைதி 2 படத்தின் கதை தயாராகி விட்டது. ரஜினி சார் படம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு கைதி 2 வேலைகள் கண்டிப்பாக தொடங்கும் என்று கூறுகிறார். தற்போது இந்த தகவல் தான் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளிவந்த படம் கைதி. இந்த படத்தில் நரேன், யோகிபாபு, பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது.

Advertisement