'இவன் வேறு யாரும் இல்லை' - விக்ரம் Bgmஐ வாயால் போட்டு பிரபலமான ரசிகர் குறித்து லோகேஷ் சொன்ன ஆச்சரிய தகவல்.
விக்ரம் ஆடியோ லாஞ்சில் விக்ரம் தீம் மியூசிக்கை வாயாலே வசித்து பிரபலமான ரசிகர் குறித்து லோகேஷ் கனகராஜ் சுவாரசிய தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்துஇருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடிவந்தனர்.
இதையும் பாருங்க : 25 லட்சத்துக்கு மனைவியா இருக்க சொன்னார் - கண்ணீருடன் கூறிய விஷால் பட நடிகை. கேட்டது யார் பாருங்க.
விக்ரமால் உயர்ந்த கமலின் மார்க்கெட் :
மேலும், லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறி இருந்தார். அதோடு விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார்.
https://www.youtube.com/shorts/p5Wcyf-JrfA
பரிசுகளை அள்ளி கொடுத்த கமல் :
விக்ரம் படத்தின் மூலம் கமலின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார் கமல். அதே போல லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர்கள் 13 பெருக்கும் tvs அப்பாச்சி பைக்கையும் அளித்து இருந்தார்.
வாயால் Bgm போட்டு ட்ரெண்ட் ஆன ரசிகர் :
இந்த படத்தை பார்த்து பல ரசிகர்கள் திரையரங்கத்தின் வெளியே வித விதமான விமர்சனங்களை கூறி இருந்தனர். ஆனால், இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவிலேயே விக்ரம் படத்தின் தீம் மியூசிக்கை வாயாலேயே வாசித்து பிரபலமடைந்த ஒரு நபரும் இணையத்தில் வைரலானார். அவரை வைத்து பல விதமான மீம்களும் வைரலானது. ஆனால், அந்த நபர் வேறு யாரும் இல்லை லோகேஷ் கனாகராஜுக்கு தெரிந்தவர் தானாம்.
https://www.youtube.com/shorts/-i4Izpy9XPY
ரசிகர் குறித்து லோகேஷ் சொன்னது :
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் அந்த நபரின் வீடியோ காட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் ' இதில் பேசிய ஆச்சரியம் என்ன தெரியுமா, அவன் என் ஸ்கூல் சீனியர் அவன் பெயர் ராகவேந்திரா. நான் ஸ்கூல் பிடித்த படித்த இவர் சென்னையில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கி படித்துகொண்டு இருந்தார். கடைசியாக 10th ல பார்த்தேன் அதற்கு பின்னர் இப்போ தான் பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.