என்னது லோகேஷ்ஷை விட நெல்சன் வாங்கும் சம்பளம் அதிகமா – எத்தனை கோடி வாங்குறாங்க பாருங்க.

0
559
lokesh
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் விட நெல்சன் திலீப் குமார் அதிகம் சம்பளம் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலீப்குமார் ஒருவர். ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி இருந்தார். பின் இவர் அதே சேனலில் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி இருந்தார். மேலும், இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

-விளம்பரம்-
nelson

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘டாக்டர்’ படத்தை எடுத்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : வடா பாவ் சாப்பிட்டது ஒரு குத்தமா ? கியாரா அத்வானியின் செயலுக்கு நெட்டிசன்களின் கண்டனம். காரணம் இந்த வீடியோ தான்.

- Advertisement -

நெல்சனின் திரைப்பயணம்:

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெல்சன் அவர்கள் சூப்பர் ஸ்டாரை வைத்து தலைவர் 169 என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது.

நெல்சனின் சம்பளம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்குவதற்காக நெல்சனுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் சம்பளத்தையும் நெல்சன் சம்பளத்தையும் ஒப்பிட்டு நியூஸ் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

lokesh

லோகேஷின் சம்பளம்:

இந்த படம் பாக்ஸ் ஆபீசில் கல்லா கட்டியது என்றே சொல்லலாம். கேஜிஎப் மற்றும் பீஸ்ட் கலெக்ஷனை எல்லாம் இந்த படம் ஓரங்கட்டி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இருப்பினும் இந்த படத்துக்கு லோகேஷ் கனகராஜ் 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் சம்பளம் நெல்சனை விட குறைவாக பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்துகிறது. இனி லோகேஷ் கனகராஜ் சம்பளம் அடுத்த படத்தில் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement