திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விஷயத்திற்கு லோகேஷ் கனகராஜ் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சால் கடுப்பான திரிஷா ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும்.

Advertisement

ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று படு ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.அந்த வகையில் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘மன்சூர் அலிகான் பேசியதை கண்டு நான் மனம் உடைந்தேன். அது என்னை கொதிப்படையவும் செய்துள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டு’ என்று பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்கு, மன்சூர் அலிகான் மிகவும் பிடித்த நடிகர். சொல்லப்போனால் கைதி படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதினார். ஆனால், சில காரணத்தால் அவரை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. இதனால் தான் லியோ படத்தில் அவருக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்தார். அப்படி இருந்தும் மன்சூரின் தவறை சுட்டிகாட்டிய லோகேஷிற்கு ரசிகர்கள் பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement