கொரோனா வைரஸினால் தற்போது ஒட்டுமொத்த உலகமும் கதி கலங்கி தவித்து இருக்கிறது. போரை விட பயங்கரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது.

Advertisement

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இந்திய பிரதமர் அவர்கள் 21 நாட்களுக்கு யாரும் வெளியில் வரக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவு இட்டு உள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்நிலையில் ஒரு நாள் வேலையில்லாமல் தவிக்கும் FEFSI ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement

இதனால் பல முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த உதவி தொகையை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த பண உதவியை செய்து உள்ளார். இவர் 50 ஆயிரம் ரூபாய்யை உதவியாக கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சமும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்து லட்சமும் கொடுத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் தன்னிடம் வேலை செய்யும் பணியாட்களுக்கு மே மாதம் வரை கொடுக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துள்ளார். இப்படி பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். லோகேஷ் கனகராஜ் அவர்கள் வங்கியில் பணிபுரியும் ஊழியராக தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் சிறு சிறு குறும்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி எனும் படத்தை கொடுத்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படம் வசூல் ரீதியாக மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன் பிறகு தற்போது இவர் தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கொரோனாவின் காரணமாக வெளியாவதற்கு கொஞ்சம் தாமதமாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Advertisement