LCUவை மையப்படுத்தி இத்தனை படங்களை எடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் – லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்

0
2283
Lokesh
- Advertisement -

எல் சி யு வில் பத்து படங்கள் இருக்கு என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குறும்பட தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

லோகேஷ் திரைப்பயணம்:

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படம் :

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், புரியுமா ஆனந்த், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

லோகேஷ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் நிறைய படங்கள் பண்ண வேண்டும். நான் நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற திட்டம் இல்லை. நான் இப்போது எல்சியு யுனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

எல்சியு படங்கள் குறித்து சொன்னது:

அந்த யுனிவர்சுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எல்சியுவில் ஒரு பத்து படங்களில் பண்ணி அதிலிருந்து வெளியேறி விடுவேன். மேலும், லியோ படத்தில் விஜயுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பத்து நாட்களில் விஜயுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. மற்ற நடிகர்களுடன் படபடப்பு இருக்கிறது. விஜயை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. லியோ படம் எல்சியூவுக்கு கீழ் வருமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் மூன்று மாதங்கள் காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement