மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “கைதி” மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருந்தனர். கைதி படம் உலக நாயகன் கமலஹாசனின் ‘விருமாண்டி’ மற்றும் ஹாலிவுட் படமான ‘டை ஹார்ட்’ ஆகிய இரண்டு படங்களின் முன் உதாரணமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றும் பேசப்பட்டது. இந்த படம் 2019 ஆம் ஆண்டின் வெளிவந்த பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் இந்த படத்திற்கு விருது கிடைத்து இருந்தது.

கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி பயன்படுத்திய பீரங்கி படு மாஸ் தாக்கத்தை ஏற்படுத்தியது. கைதி படத்தின் கிளைமாக்ஸ்ஸில் பயன்படுத்தியதை போன்று மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கூட வில்லை வைத்து ஒரு காட்சியை அமைத்து இருந்தார் லோகேஷ். ஆனால், கைதி படத்தில் கைகொடுத்ததை போல மாஸ்டர் படத்தின் இந்த காட்சி அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜுடன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் அந்த பீரங்கியை பயன்படுத்த யோசனை வந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

Advertisement

அதாவது ஆயுத பூஜை காலங்களில் அர்னால்ட்டு நடித்த கமாண்டோ படத்தில் இருந்த ஒரு புகைப்படத்தில் அர்னால்ட்டிற்கு பட்டை எல்லாம் அடித்து மீம் போட்டு இருந்தார்கள். அதை வைத்து தான் கைதி படத்தில் அந்த காட்சியை உருவாக்கினோம். ஆனால், அர்னால்டு பயன்படுத்திய அது போன்ற பீரங்கி இங்கே இருக்கிறதா என்று தெரியாததால் அந்த பீரங்கியை பயன்படுத்தினோம் என்று கூறியுள்ளார் லோகேஷ். ஏற்கனவே கைதி படம் வெளியான பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகாரஜ் கைதி படம் உருவான விதத்தை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, நான் என்னுடைய நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது டேபிள் மீது ஒரு சின்ன பேப்பர் கட்டிங் இருந்தது.

அதிலிருந்த பெயர், ஊர் பத்தி மென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதில் ஒரு இன்ஸ்பெக்டர் தன்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு பார்ட்டி வைத்து இருந்தார். அந்த பார்ட்டிக்கு போலீசார் எல்லோரும் போயிருந்தார்கள். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் யாருமே இல்லை. அங்கு 4 கல்லூரி மாணவர்கள் தண்ணி குடிச்சிட்டு வண்டி ஒட்டி வந்ததில் உள்ளே இருந்தார்கள். பின் போலீஸ் ஸ்டேஷனில் யாரும் இல்லாத உடனே அவர்கள் அங்கு இருந்த வாக்கி டாக்கி எல்லாம் திருடி எடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.இந்த சீன் வெத்து தான் நாங்கள் கைதி படத்தினை இயக்க ஆரம்பித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு மாதத்தில் கதையை டெவலப் பண்ணி கைதி படத்தை உருவாக்கினோம் என்று கூறி இருந்தார்

Advertisement
Advertisement