கமலின் மருதநாயகம் படத்தையும் விட்டு வைக்காத லோகேஷ், வேற லெவல் செய்கை. (விக்ரம் படத்தில் இதை நோட் செஞ்சீங்களா ? )

0
524
vikram
- Advertisement -

மருதநாயகம் படத்தில் பயன்படுத்திய ஒரு விஷயம் தற்போது விக்ரம் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருக்கின்றனர். அதோடு லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறியிருந்தார்.

கமல் குறித்த தகவல்:

அதோடு கமல், லோகேஷுக்கு சொகுசு காரை பரிசாக கொடுத்து இருந்தார். மேலும், விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான்.

-விளம்பரம்-

பான் இந்திய படம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு பின்னர் தமிழில் மிக தரமான படைப்பு வந்திருப்பது குறித்து கோலிவுட் கொண்டாடி வருகிறது. பான் இந்திய படமாக தற்போது விக்ரம் படம் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் மிரட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளில் ஒன்று கிளைமாக்ஸில் வரும் பீரங்கி காட்சி. இந்த காட்சியின் போது திரை அரங்கமே அதிர்ந்தது என்று சொல்லலாம்.

மருதநாயகம் படத்தில் பயன்படுத்திய விஷயம்:

இப்படி ஒரு நிலையில் இந்த பீரங்கி இதற்கு முன்பு கமலஹாசன் இயக்கி,நடித்த மருதநாயகம் படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்தது. மருதநாயகம் படத்தில் கமலஹாசன் பயன்படுத்திய அதே பீரங்கியை தான் தற்போது விக்ரம் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திருக்கிறார். இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜே பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement