லாஸ்லியா நடிக்கும் முதல் படம். அதுவும் இந்த கிரிக்கெட் வீரருடனா??

0
71947
losliya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவருடைய விளையாட்டு திறமையால் இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் கிரிக்கெட் விளையாட்டை தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் சமீபத்தில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு இருந்தார். அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், ஹர்பஜன் சிங்க் அவர்கள் கடந்த சில மாதங்ளாக தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்க் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

-விளம்பரம்-

தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் தமிழ் படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். மேலும், ஹர்பஜன் சிங்க் நடிக்கும் இந்த படத்திற்கு ஃப்ரெண்ஷிப் என்று பெயர் சூட்டி உள்ளார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். நேற்று தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனதே கவின்– லாஸ்லியா காதல் தான். இந்த நிகழ்ச்சி முடிந்தும் இப்போது வரை கூட கவின்– லாஸ்லியா காதல் குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதோடு லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் ஆற்றிய உரையில் இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறியிருந்தார். இதையடுத்து லாஸ்லியா சினிமாவில் எப்போ அறிமுகமாக உள்ளார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மூலம் தான் லாஸ்லியா திரையுலகில் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சந்திரா மீடியா விஷன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் கூடிய விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளார்கள். இந்நிலையில் லாஸ்லியா அவர்கள் ஹர்பஜன் நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

Advertisement