காதலர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை. எப்படி இருக்கிறது மணிகண்டனின் ‘லவ்வர்’ – முழு விமர்சனம்.

0
461
Lover
- Advertisement -

தமிழில் ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர் அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மணிகண்டன் கௌரிப்பிரியா, கண்ணா ரவி நிகிலா ஷங்கர் ஹரிஷ் குமார் ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லர் டாலர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் சிக்கல்கள் குறித்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் கதை :

படத்தில் அருண் (மணிகண்டன்) மற்றும் ஸ்ரீகவுரி ப்ரியா (ஸ்ரீகவுரி ப்ரியா) ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் யுத்தம் தான் லவ்வர் படத்தின் கதை. படத்தில் மணிகண்டனும் கௌரி பிரியாவும் கல்லூரியில் இருந்து காதலித்து வருகிறார்கள். அவர்களது காதல் ஆறு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக கசங்க தொடங்குகிறது எந்த வேலைக்கும் செல்லாமல் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று இருக்கும் அருண் தன்னுடைய லவ்வர் வேலைக்கு செல்ல வலியுறுத்தும் போதெல்லாம் நான் சந்தோஷம் செய்யப் போகிறேன் என்று மூதாதை தனமாக சுற்றி வருகிறார்.

- Advertisement -

காலையில் 10:00 மணிக்கு குடிக்கும் அளவிற்கு மதுவிற்கும் அடிமையாக இருக்கிறார் மணிகண்டன். வேலையில்லாத காரணத்தினாலும் சொந்த தொழில் தொடங்க முடியாத விரத்திய நாளும் மணிகண்டனுக்கு செல்லும் இடமெல்லாம் ஏற்படும் வசனத்தினாலும் அவரை ஒரு கோபக்காரராக மாறுகிறது அந்த கோபத்தை தன்னுடைய காதலி மீது காட்டுகிறார். இதனால் அவரது காதலி எரிச்சலடைகிறார்.

மணிகண்டன் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலி யாருடனும் பழக கூடாது வெளியில் செல்லக்கூடாது என்று தன்னுடைய காதலை மீது ஒரு சந்தேக பார்வை மணிகண்டனுக்கு ஆரம்பிக்கிறது. ஆனால், மணிகண்டனின் உத்தரவுகளை மீறியும் நாயகி கௌரி பிரியா தனக்கு பிடித்ததை போல வாழ்ந்து வருகிறார். இதனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுகிறது. இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? மணிகண்டன் சந்தோஷ் தொழில் தொடங்கினாரா? என்பது படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

நிறை :

வழக்கம் போல மணிகண்டன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

காதலர்களுக்கும் கண்டிஷன்கள் இருக்க கூடாது, நம்பிக்கை தான் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அழகாக சொல்லி இருக்கிறார்கள்.

மணிகண்டன் மற்றும் கவுரி பிரியா ஆகிய இருவரை போல மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

காதல், சண்டை, எச்சரிக்கை, அழுகை, பிரிவு, ஏமாற்றம் என முதல் பாதி சுவாரசியமாக செல்கிறது.

ஷான் ரோல்டனின் பிண்ணனி இசை படத்தின் எமோஷன் காட்சிகளுக்கு பலம்.

குறை :

முதல் பாதி ஸ்வாரஸ்யத்தை இரண்டாம் பாதி அப்படியே சுதப்பி இருக்கிறது.

காதலியை திட்டுவது, குடிப்பதை நியாயப்படுத்துவது, அடித்துவிட்டு சாரி கேட்பது என்று சில alpa male ஐடியாலஜி படத்திற்கு பலவீனம்.

படத்தின் நீளம் தான் மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது.

இறுதி அலசல் :

விட்டுக் கொடுத்துக் கொண்டே செல்வது மட்டும் காதல் அல்ல. காதல் என்றைக்கும் காதல்தான். அதன் புரிதல் தான் எந்த வகையான காதல் அது என்பதை படத்தில் சொல்லி இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இயக்குனர் கோட்டைவிட்டுள்ளார். மொத்தத்தில் லவ்வர் கொஞ்சம் ஜவ்வர் தான். சிக்கல்களில் இருக்கும் காதலர்கள் பார்க்க வேண்டிய படம். ஆனால் ஒரு முறை மட்டுமே.

Advertisement