Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் - 'கோட்' இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் - 'கோட்' இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து

எழுதியவர்subhashini25 ஜூன், 2024 அன்று 08:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கோட்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்து பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். மேலும், விஜயின் 'கோட்' படத்திலிருந்து சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் - 'கோட்' இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து

இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. மறைந்த பாடகி பவதாரணி குரல் ஏஐ மூலம் தான் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இதற்கு ‘TimelessVoices.ai’ என்ற நிறுவனம் உதவி இருக்கிறது. இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் பதிவு போட்டிருந்தார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

'கோட்' இரண்டாவது பாடல்:

மேலும், இந்த பாடல் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு காரணம் பவதாரணி குரல் என்று சொல்லலாம். அதோடு இந்த பாடலின் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. இந்நிலையில் 'கோட்' படத்தின் பாடல் தொடர்பாக அளித்த பேட்டியில் கபிலன் வைரமுத்து, இந்த பாடல் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் விஜய் சாருக்கும், வெங்கட் பிரபுவுக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இது இரண்டு பேருக்குமே எழுதிய முதல் பாடல்.

பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் - 'கோட்' இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து பேட்டி:

வெங்கட் பிரபுவுடன் 'கோட்' படத்தில் தான் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அவர் சொல்லும் போது யார் பாடுறாங்க என்று எனக்கு தெரியாது. அதற்குப் பிறகுதான் பவதாரணி உடைய குரலை பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிந்தது. எனக்கு அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அவருடைய இழப்பு தமிழ் திரை உலகுக்கு பேரிழப்பு. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே உலக அளவில் இந்த பாடல்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. பொதுவாகவே ஒரு பாடலுக்கு வரிகளை எழுதிக் கொடுக்கும் போது நிறைய மாற்றம் சொல்வார்கள். ஆனால், நான் ஒரே வெர்சன் தான் கொடுத்தேன். அதுவே ஓகே ஆகிவிட்டது.

பாடல் குறித்து சொன்னது:

விஜய் சார் பாட்டு பாடி முடித்ததும் எல்லாம் ஓகேவா இன்னும் வேற ஏதாவது பண்ணனுமா என்று யுவன் கிட்ட கேட்டார். ஐந்து நிமிடம் யோசித்து யுவன், சூப்பர் என்று சொல்லிவிட்டார். உடனே என்னை பார்த்து விஜய் சந்தோசமாக சிரித்தார். அதிலேயே அவருக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்தது. சோசியல் மீடியாவில் இந்த பாட்டுக்காக வருகிற கமெண்ட்ஸை பார்க்கும்போது வார்த்தைக்கு அளவே இல்லை. எல்லோரைப் போலவும் நானும் திரையில் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பாடல் ஹிட் ஆகுவதற்கு முதல் காரணம் பவதாரணி குரல்.

பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் - 'கோட்' இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து

விஜய் குறித்து சொன்னது:

விஜய் சார் பாடி முடித்ததும் யுவன் பிளே பண்ணி காண்பித்தார். பவதாரணி குரல் என் மனதை என்ன செய்ததோ அந்த உணர்வுதான் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களிடமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் இந்த பாடல் ஹிட்டுக்கு விஜய் சார் இரண்டாவது காரணம். அவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய் சார் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வந்தபோது, யுவனிடம் முதல் முறையாக வாய்ப்பு கேட்டு வர ஒரு சாதாரண நபர் எப்படி வருவாரோ அதே மாதிரிதான் பவ்வியமாக, பணிவாக வந்தார். யுவன் இப்படி பாடுங்க, அப்படி பாடுங்க என்று சொல்லும் போது அதை அப்படியே கேட்டுக் கொண்டு விஜய் பாடினார். என்னைப் பார்த்து செம்மையா எழுதி இருக்கீங்க, பாடல் வரிகள் எல்லாம் சூப்பராக இருக்கு என்று கைகுலுக்கி பாராட்டினார். மூன்றாவது யுவனுக்கு தான் எல்லாப் புகழும் சேரும் என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#GOAT Movie#கபிலன் வைரமுத்து#kabilan vairamuthu#கோட் படம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement