சினேகன்- கன்னிகா கூறி இருக்கும் குட் நியூஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் அதிகமாக பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.

இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக நடந்து இருந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.
View this post on Instagram
சினேகன் – கன்னிகா குறித்த தகவல்:
அதோடு இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும், இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன் பல நாள் கனவு நினைவான சந்தோஷத்தில் கன்னிகா தன் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன்னுடைய கணவர் சினேகன் சொல்கிறார்.
View this post on Instagram
கன்னிகா கர்ப்பம்:
அவர் அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவிட்டு, நாங்கள் அம்மா அப்பாவாக போறோம். உங்கள் எல்லோருடைய அன்பும், வாழ்த்துக்களும் வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இவர்களின் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சினேகன்- கன்னிகா தொழில்:
மேலும், சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக இருக்கிறார். கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார். சமீபத்தில் கூட இவர் புதிய தொழிலை ஆரம்பித்திருப்பதாக அறிவித்து இருந்தார். இவர்கள் ‘சினேகன் ஹெர்ப்ஸ்’ என்ற பெயரில் ஹெர்ப்ல் ஹேர் ஆயில் தயாரிக்கும் தொழிலை தொடங்கி இருக்கிறார்கள்.






