நடிகர் சங்க தேர்தல், கூட்டத்தில் நடிகரின் கையை கடித்த எதிர் அணியை சார்ந்த நடிகை (பிரகாஷ் ராஜ் அணியாச்சே இவங்க)

0
9581
hema
- Advertisement -

காரசாரமாக தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் சில்மிஷம் செய்த பிரபல நடிகை வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜூம், விஷ்ணு மஞ்சுவும் போட்டியிட்டார்கள். இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் ஒரு அணியும் தேர்தலுக்கான பிரச்சாரம் செய்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு செய்த தேர்தல் பிரசாரங்கள் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் சுடச்சுட விவாதங்களாக வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், பிரகாஷ் ராஜ் ஒரு கன்னடர் என்றும், வெளி நபருக்கு தெலுங்கு திரையுலகிற்கு ஆதரவளிக்கக் கூடாது என்று விஷ்ணு மஞ்சு அணி பிரச்சாரம் செய்துவந்த நிலையில் நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பவன் கல்யான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவளித்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 665 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கு பதிவு நடந்து முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில் மஞ்சு விஷ்ணு அணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரகாஷ்ராஜ் அணியில் இருந்து துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா அவர்கள் நடிகர் சிவ பாலாஜி கையை கடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ந்து போனார். பின்னர் அங்கிருந்து ஹேமா சென்று விட்டார். அங்கு சுற்றியிருந்தவர்கள் பாலாஜியை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போய் நின்றார்கள். மேலும், இந்த சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஹேமாவிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் சிவபாலாஜி கடித்தது உண்மைதான். காரணம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள்.

MAA Election 2021 Nominations | Prakash Raj | Srikanth | Hema | MS  entertainments - YouTube

நான் ஏன் கடித்தேன் நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்று தில்லாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிவ பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியது, அடையாளம் தெரியாத நபர் எங்களது அணிக்கு பிரச்சாரம் செய்ததை எதிர்த்தோம். அப்போது என் பின்னால் நின்ற ஹேமா என் கையை திடீரென கடித்தார். அவர் ஏன் கடித்தார் என்பது எனக்கு தெரியாது. நான் எதிர்க்கக் கூடாது என்பதற்காக கடித்து இருக்கலாம். ஆனால், உண்மை காரணம் என்னவென்று அவருக்குத்தான் தெரியும். நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி திருப்பி விட்டு கடைசியில் ஏன் கடித்தார் எதற்கு கடித்தார் என்று வெளியே சொல்லாமலேயே போய் விட்டார்கள். மேலும், ஹேமா, சிவபாலாஜியை கடிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement